செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்தும் அரசை உறுதி செய்வோம் - பிரதமர் மோடி

06:09 AM Apr 12, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் அரசை உறுதி செய்வோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement

அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம் எனக் கூறியுள்ளார்.  தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும்

இதர கூட்டாளிகளுடன் ஒன்றிணைந்து தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்வோம் எனவும் தெரிவித்துள்ளார். மாமனிதர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் அரசை உறுதி செய்வோம் என கூறியுள்ள பிரதமர் மோடி, தமிழ் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாக்க, ஊழல் மலிந்த திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியம் எனவும் அதனை நமது கூட்டணி செய்து முடிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
admk bjp allianceFEATUREDJayalalithaMAINMGRPM Moditamilnadu nda alliance
Advertisement