செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தமிழகத்தில் ஒப்பந்தம் முடிந்து செயல்படும் டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை - அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

02:15 PM Nov 17, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

தமிழகம் முழுவதும் ஒப்பந்தம் முடிந்து செயல்படும்  டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை   தொடர்பாக அறிக்கையுடன் நேரில் ஆஜராகும்படி டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காமன்தொட்டி கிராமத்தைச் சேர்ந்த பி.சுந்தர் தாக்கல் செய்த மனுவில், தமக்கு சொந்தமான கடையை, டாஸ்மாக் மதுக்கடைக்கு ஒப்பந்தம் செய்ததாகவும், பின்னர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணம், கடைக்கு பின்னால் 400 சதுர அடியில் மற்றொரு கடையை கட்டிக் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், பழைய கடையில் இருந்து புதிய கடைக்கு மதுக்கடையை மாற்றாததாலும், ஒப்பந்த காலம் முடிவடைந்து விட்டதாலும், கடையை காலி செய்யாமல் டாஸ்மாக் நிர்வாகம் மறுத்து அmயவருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

இதனையடுத்து கடையை காலி செய்ய வற்புறுத்தியதால், தம் மீது பொய் வழக்கு போடப்பட்ட நிலையில், அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், தமிழ்நாடு முழுவதும் வாடகை ஒப்பந்தம் முடிந்த பிறகும் எத்தனை கடைகளை டாஸ்மாக் நிர்வாகம் காலி செய்யாமல் உள்ளது? என கேள்வி எழுப்பினார்.

மேலும், இதுகுறித்து அறிக்கையுடன் நாளை நேரில் ஆஜராகும்படி, டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிட்டார்.

Advertisement
Tags :
MAINmadras high courttasmacManaging Director of Tasmacasmac shops
Advertisement