செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவுக்கு காரணம் என்ன? ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!

03:16 PM Jan 07, 2025 IST | Murugesan M

நமது சமூகத்தில் மதுபானம், கடன் வாங்குதல் உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் குழந்தை பிறப்பு விகிதம் ஒட்டுமொத்தமாக 11 சதவீதம் குறைந்துள்ளது என முன்னணி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, இப்போது தமிழகத்தில் பல மாவட்டங்களில் பிறப்புகளை விட இறப்புகள் அதிகமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

Advertisement

அதற்கு மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு மிகவும் நகரமயமாக உள்ளதும் ஒரு காரணம் என அவர் தெரிவித்துள்ளார். மதுபானம், கடன் வாங்குவதற்கு கிராமப்புற சமுதாயம் உந்தப்படுவதும் குறைந்த பிறப்பு விகிதத்துக்கு காரணம் என நம்புவதாகவும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

நமது சமூகத்தில் மதுபானம், கடன் வாங்குதல் ஆகிய பிரச்னைகளை தீர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். , இது ஒரு சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் மற்றும் ஆன்மீக பிரச்சனை எனவும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
birth ratebirth rate decreaseFEATUREDMAINtamilnadu birth rateZOHO Founder Sridhar Vembu
Advertisement
Next Article