தமிழகத்தில் கூட்டணி இல்லாமல், தனித்து ஆட்சியை பிடித்த ஒரே கட்சி அதிமுக தான் - எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!
02:59 PM Dec 15, 2024 IST
|
Murugesan M
கூட்டணி வரும்... போகும்... ஆனால் அதிமுகவின் கொள்கை என்றும் மாறாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Advertisement
சென்னை அடுத்த வானகரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று அவர் உரையாற்றினார்.
அப்போது பிறகட்சிகள் போல் இன்றி உண்மையான தொண்டர்களுக்கு மட்டுமே உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Advertisement
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 1.98 லட்சம் வாக்குகளால்தான் அதிமுக ஆட்சி பறிபோனதாகவும், தமிழகத்தில் கூட்டணி இல்லாமல், தனித்து நின்று ஆட்சியை பிடித்தது அதிமுக மட்டும் தான் எனறும் அவர் தெரிவித்தார். 500க்கும் மேற்பட்ட பொய்களை சொல்லி திமுக ஆட்சியை கைப்பற்றியதாகவும் எடப்பாடி பழினிசாமி கூறினார்.
Advertisement