தமிழகத்தில் பிராமணர்கள் பாதிக்கப்படும்போது எந்த அரசியல் கட்சியினரும் ஆதரவாக குரல் கொடுப்பதில்லை : அர்ஜூன் சம்பத் வேதனை!
தமிழகத்தில் பிராமணர்கள் பாதிக்கப்படும்போது எந்த அரசியல் கட்சியினரும் ஆதரவாகக் குரல் கொடுப்பதில்லை என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வேதனை தெரிவித்துள்ளார்.
Advertisement
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் "அந்தணர், ஆலயம், ஆகமம் பாதுகாப்பு மாநாடு" என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அர்ஜுன் சம்பத், ஏழை பிராமணர்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 10 சதவீத இட ஒதுக்கீட்டினை அமல்படுத்தத் தமிழக பாஜக அழுத்தம் தரவேண்டும் என வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கஸ்தூரி, தமிழகத்தில் பிற மொழி பேசுபவர்கள் சுமார் 27 சதவீதத்தினர் வசிக்கின்றனர் என்றும், அவர்களுக்குத் தமிழ் என்பதே 3வது மொழிதான் எனவும் கூறினார்.