தமிழகத்தில் புதிதாக முந்திரி வாரியம் : வேளாண் பட்ஜெட்டில்
தமிழகத்தில் முந்திரி வாரியம் உருவாக்கப்படும் எனவும் அதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
சட்டப்பேரவையில் உரையாற்றிய வேளாண் அமைபனைமரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் நடப்பாண்டில் பத்து லட்சம் பனைவிதைகள் பனை மேம்பாட்டு இயக்கத்தின் மூலம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், புதிய ரக பலா சாகுபடி பரவலாக்கம், ஊடுபயிர் போன்ற திட்டங்களை ஊக்குவிக்க ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும் மின்சார இணைப்பு இல்லாத விவசாயிகளுக்கு சூரிய சக்தியால் இயங்கக் கூடிய பம்பு செட்டுகள் மானியத்துடன் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் வேதாரண்யம் முல்லைப்பூ , நத்தம் புளி, கப்பல்பட்டி முருங்கை உள்ளிட்ட 5 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறபப்டும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்
அதிக லாபம் தரும் மாற்றுப் பயிர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் பன்னீர் செல்வம் இதற்கென ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவித்தார்.
வேளாண்மையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும், விரைந்து தீர்வு காணும் வகையிலும் வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் பெயரில் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் விவசாய நிலமற்ற பட்டியல் சமூக மக்களுக்கு வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வாங்க கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து வேளாண் நிதிநிலை அறிக்கையை படித்த அமைச்சர் 2025-26-ம் ஆண்டில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதற்காக ஆயிரத்து 427 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் நடப்பாண்டில் நெல் ஊக்கத்தொகை வழங்கிட 522 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 22 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், காவிரி டெல்டா பகுதிகளில் 6 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஆறுகள் கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் 120 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
எனவே மொத்தமாக வேளாண் துறைக்கு 45 ஆயிரத்து 661 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.