செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் - அமலுக்கு வந்தது கடும் தண்டனை வழங்கும் சட்டம்!

10:21 AM Jan 29, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் சட்டம் அமலுக்கு வந்தது.

Advertisement

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனை விதிக்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேறிய சட்ட திருத்தம், ஆளுநரின் ஒப்புதலை அடுத்து அரசிதழில் வெளியாகியுள்ளது.

கடந்த 25ம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், அன்றைய தேதியில் இருந்து அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி, இந்த குற்றங்களுக்கு முதல் தண்டனையாக 5 ஆண்டு சிறை தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், இரண்டாவது அல்லது தொடர்ச்சியான தண்டனையாக 10 ஆண்டு சிறை தண்டனை, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிலையங்கள், விடுதி, திரையரங்கு, வணிக வளாகங்கள் போன்ற பொது இடங்களில் போதிய மின்விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் எனவும், குற்ற சம்பவங்கள் நடந்த 24 மணி நேரத்தில் காவல் நிலையங்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் எனவும் அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
10 years imprisonmentcrimes against womenFEATUREDlaw to impose strict punishmentMAINTamil Nadu
Advertisement