தமிழகத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது - மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
Advertisement
சென்னை மதுரவாயலில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிண்டி மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் இருந்து வருதாக தெரிவித்தார்.
கொகல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்தது கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருந்து தமிழக அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றும் சாடினார்.
தமிழக அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பும் பணி உயர்வு வழங்க வேண்டும் என்றும், பாதுகாப்பு விஷயத்தில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மாணவர்கள் சிறந்து விளங்கவே புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் எல்.முருகன் தெரிவித்தார்.