தமிழகத்தில் வரும் 26, 27-ஆம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
11:08 AM Nov 21, 2024 IST | Murugesan M
தமிழகத்தில் வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தெற்கு அந்தமானை ஒட்டியுள்ள வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் காற்று சுழற்சி, நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.
Advertisement
இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக நவம்பர் 25ம் தேதி தமிழகத்தில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், 26 மற்றும் 27ம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement