செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

06:17 AM Mar 28, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.

Advertisement

தமிழகத்தில் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நிறைவடைந்த நிலையில், இன்று 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்குகிறது. முதல் நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இதனை மாநிலம் முழுவதும் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 மாணவர்கள் எழுத உள்ளனர்.

இதற்காக 4 ஆயிரத்து 113 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வில் முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரத்து 858 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement
Tags :
10th examFEATUREDMAINpublic examination.sslctamilnadu
Advertisement