தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு பாஜக கூட்டணி ஆட்சி அமையும் - தமிழிசை சௌந்தரராஜன் திட்டவட்டம்!
07:16 AM Apr 05, 2025 IST
|
Ramamoorthy S
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Advertisement
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கச்சத்தீவு விவகாரத்தில் முதலமைச்சர் நாடகம் ஆடுவதாகவும், இந்த விவகாரத்தில் காங்., திமுக கட்சிகள் துரோகம் இழைத்துள்ளதாகவும் கூறினார்.
மக்களை ஏமாற்றவே நீட் விலக்கு தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் என்றும், மாணவர்கள் நீட் தேர்வால் பயனடைந்து வருவதாகவும் அவர் கூறினார். மாணவர்களின் நலன் கருதி மத்திய அரசு இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருவதாகவும் நீட் விவகாரத்தில் திமுக அரசு அரசியல் செய்யக்கூடாது என்றும், தமிழகத்தில் 2026-ம் ஆண்டு பாஜக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என தமிழிசை கூறினார்.
Advertisement
Advertisement