செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தமிழகத்தில் 4 வழிச்சாலை அமைக்க ரூ.1, 338 கோடி ஒதுக்கீடு - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்!

09:45 AM Dec 20, 2024 IST | Murugesan M

தமிழ்நாட்டில் 4 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு ஆயிரத்து 338 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

Advertisement

ராணிப்பேட்டை முதல் ஆந்திர எல்லை வரை 28 கிலோமீட்டர் தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைக்க இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த நெடுஞ்சாலை 4 வழிச் சாலையாக இருக்கும் எனவும், இரு மார்க்கமும் 2 வழி சர்வீஸ் சாலைகளை  கொண்டிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

மேலும், 4 பெரிய பாலங்கள், 2 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ள நிதின் கட்கரி,  இந்த சாலை சென்னை மற்றும் பெங்களூரு, திருப்பதி மற்றும் வேலூர் நகரங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டையில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அடுத்தாண்டு நிறைவடையும் நிலையில், இந்தத் திட்டம் அப்பகுதியில் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
338 crore for tn4-lane highway in Tamil Nadu.central governmentChennaiFEATUREDMAINranipetRs 1Tamil Nadu
Advertisement
Next Article