செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

06:05 PM Apr 04, 2025 IST | Murugesan M

தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை டிஜிபி-யாக இருந்த சீமா அகர்வால், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபி-யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அந்த துறையின் டிஜிபி பொறுப்பை ஐஜி-யாக உள்ள ரூபேஷ் குமார் மீனா கூடுதலாக கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தலைமையக கூடுதல் ஆணையராக இருந்த கபில் குமார் சி.சரத்கர் அமலாக்கத்துறை ஐஜி-யாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த விஜயேந்திர பிடாரி ஐபிஎஸ், காவல்துறை  தலைமையக கூடுதல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு ஐஜி-யாக இருந்த சத்ய பிரியா ஐபிஎஸ் காவலர் நல்வாழ்வுத்துறை ஐஜி-யாகவும், சென்னை ஊழல் தடுப்புத்துறை இணை இயக்குநராக இருந்த சந்தோஷ் குமார், பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு ஐஜி-யாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல, அமலாக்கத்துறை ஐஜி-யாக இருந்த கார்த்திகேயன், சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையராகவும், காவலர் நல்வாழ்வுத்துறை டிஐஜி-யாக இருந்த துரை ஐபிஎஸ், காலியாக இருந்த தலைமையக டிஐஜி பொறுப்பிலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement
Tags :
8 IPS officers transferred in Tamil Nadu!Akhilesh wife Dimple contest in Mainpuri constituency! - 16 Samajwadi candidates announced!FEATUREDMAINtn governmenttn order
Advertisement
Next Article