தமிழகத்தை குற்றவாளிகளின் சொர்க்க பூமியாக மாற்றிய திமுக அரசு - இபிஎஸ் குற்றச்சாட்டு!
திமுக அரசு தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக மாற்றியிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
Advertisement
திருப்பூர் மாவட்டம் சேமலைக் கவுண்டம்பாளையத்தில் தாய், தந்தை மற்றும் மகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இபிஎஸ், திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெறும் தொடர் குற்றங்களை தடுக்க இங்கு ஒரு ஆட்சி இருக்கிறதா? இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ள இபிஎஸ், திமுக அரசு தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக மாற்றியுள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த கொலையில் தொடர்புடைய அனைவரையும் விரைந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இனியாவது முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.