செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தமிழகத்தை நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - வானிலை மையம் எச்சரிக்கை!

06:15 PM Dec 10, 2024 IST | Murugesan M

காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி நகர்வதால் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யுமென தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி நகர்வதால், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர்,அரியலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

Advertisement

கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும் என கூறிய பாலச்சந்திரன், சென்னையில் நாளை முதல் 2 நாட்களுக்கு பரவலாக கனமழை பெய்யக் கூடுமென தெரிவித்தார்.

வரும் 12ஆம் தேதி தமிழகத்தின் 21 மாவட்டங்களில் கனமழை பெய்யுமென்றும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறினார்.

Advertisement
Tags :
FEATUREDMAINTamil NadurainBalachandranlow pressureSouthern Region Meteorological Center ChiefCAUVERY DELTA DISTRICT
Advertisement
Next Article