தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!
மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த வகையில், சென்னை சேத்துப்பட்டில் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திராவில் வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை போன்று தமிழக அரசும் மாதாந்திர உதவி தொகையை உயர்த்தி வழங்க கோரி கோஷங்களை எழுப்பினர்.
மேலும், தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்து சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்துள்ளனர்.
இதேபோன்று திருப்பூர், திண்டுக்கல், ராமநாதபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.