செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தமிழக ஆளுநருடன் கிருஷ்ணசாமி சந்திப்பு - அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரிக்கை!

08:30 PM Nov 08, 2024 IST | Murugesan M

அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்ட 3 சதவீத இட ஒதுக்கீட்டால் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரும், ஆதி திராவிடர் சமூகத்தினரும் பாதிக்கப்படுவதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மனு அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  அருந்ததியருக்கான 3 சதவீத உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதன் அவசியம் குறித்து ஆளுநரிடம் மனு அளித்ததாக தெரிவித்தார்.

Advertisement

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வுரிமையை நிலைநாட்டுவது குறித்தும் ஆளுநரிடம் விவாதித்ததாக கூறினார். மேலும், இட ஒதுக்கீட்டுக்கு தான் எதிரியல்ல என்றும், உள் இட ஒதுக்கீட்டை மட்டுமே எதிர்ப்பதாகவும் கிருஷ்ணசாமி கூறினார்.

 

Advertisement
Tags :
MAINChennaiRN Ravitamilnadu governordr Krishnasamy neet governor
Advertisement
Next Article