செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தமிழக - கர்நாடக எல்லையில் கர்நாடக அமைப்பினர் ஆர்ப்பாட்டம் : 20க்கும் மேற்பட்டோர் கைது!

03:22 PM Mar 22, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில், தமிழக எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தனர்.

Advertisement

கர்நாடக மாநிலம் பெலகாவியில் மராட்டிய மொழி பேசவில்லை எனக்கூறி அரசு பேருந்து நடத்துனரை மராட்டிய அமைப்பினர் தாக்கினர்.

இதற்குக் கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

Advertisement

இதையடுத்து, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தைக் கண்டித்தும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என கன்னட அமைப்பினர் அறிவித்தனர்.

இந்த நிலையில், போராட்டம் எதிரொலியாக பல்வேறு பகுதிகளில் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் கர்நாடக அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு தமிழக எல்லையை நோக்கி வர முயன்றனர். அப்போது அவர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறை, 20க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர்.

Advertisement
Tags :
Complete shutdown in KarnatakaFEATUREDKarnataka organizations protest at Tamil Nadu-Karnataka border: More than 20 people arrested!MAINகர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்தமிழக - கர்நாடக எல்லை
Advertisement