தமிழக காங்கிரஸ் எஸ்.சி. அணி தலைவர் ரஞ்சன் குமார் மீது வழக்குப்பதிவு!
கவுன்சிலர் சீட்டு வாங்கித் தருவதாக கூறி ஐம்பது லட்சம் மோசடி செய்த வழக்கில் காங்கிரஸ் எஸ்.சி. அணி தலைவர் ரஞ்சன் குமார் மீது ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Advertisement
தேனாம்பேட்டை சேர்ந்த ஜானகி என்பவரிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு கவுன்சிலர் சீட்டு வாங்கித் தருவதாக பல தவணை முறையில் அவர் 50 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.
சீட்டு வாங்கி தராமலும் பணத்தை தராமல் ஏமாற்றி வருவதாக பாதிக்கப்பட்ட ஜானகி, காவல் ஆணையர் அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் மற்றும் ரஞ்சித் ஆகியோர் மீது புகார் அளித்தார்.
புகாரின் மீது எவ்வித நடவடிக்கை இல்லாததால் பாதிக்கப்பட்ட பெண்மணி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றம் வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட்டு உள்ளது.
அதன் பேரில் ராயப்பேட்டை போலீசார் காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் மற்றும் ரஞ்சித் குமார் மீது மோசடி பொய்யான ஆவணம் புனைதல் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.