For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

தமிழக சட்டசபையில் அவமதிக்கப்பட்ட தேசிய கீதம்! - ஆளுநர் மாளிகை

10:21 AM Jan 06, 2025 IST | Murugesan M
தமிழக சட்டசபையில் அவமதிக்கப்பட்ட தேசிய கீதம்    ஆளுநர் மாளிகை

தமிழக சட்டசபையில் இன்று தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது என்று தமிழக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும்.

அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது.

Advertisement

ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும் மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் அவர்கள் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
Advertisement