செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் - உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

06:28 AM Apr 10, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நிறுவன நேர்காணலில் பங்கேற்று பேசிய அமித்ஷா, தமிழகம், பீஹார் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெறும் எனத் தெரிவித்தார்.

வக்ஃபு சட்ட திருத்தம் தங்களுக்கு அநீதி இழைப்பதாக இஸ்லாமியர்கள் நினைக்கவில்லை எனவும் இஸ்லாமிய பெண்களுக்கு வக்ஃபு சட்ட திருத்தத்தால் வாரியத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்தார்.

Advertisement

வக்ஃபு மசோதா மீது நாடாளுமன்றத்தில் பிரியங்கா வாக்களிக்கவில்லை எனவும் இவ்வளவு கூறுபவர்கள் நாடாளுமன்றத்தில் செயலாற்ற மறுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

வக்ஃபு மசோதா மீதான விவாதத்தில் 50 சதவீதம் நேரம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டும் அதில் ராகுல் காந்தி பேசவில்லை எனக் கூறிய அமித்ஷா,  வக்ஃபு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாதவர்களை நியமனம் செய்யவில்லை எனக் கூறியுள்ளார்.

வக்ஃபு வாரிய கவுன்சிலில்தான் வேற்று மதத்தினர் இடம் பெறுவார்கள் எனவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
amil Nadu assembly elections.Bihar assembly elections.BJP AllianceFEATUREDhome minister amit shahMAINrahul gandhiWaqf Bill
Advertisement