தமிழக சட்டப்பேரவை 2-ஆம் நாள் கூட்டத்தொடர் : இரங்கல் தீர்மானத்துடன் ஒத்திவைப்பு!
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு இன்றைய பேரவை நிகழ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.
தமிழக சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வு தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்பு வாசித்தார்.
அதன் தொடர்ச்சியாக, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு குறித்து இரங்கல் தீர்மானமும் வாசிக்கப்பட்டது.
மேலும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, இருவருக்கும் இரண்டு மணித்துளிகள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, மறைந்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பேரவையின் இன்றைய நிகழ்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.