செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்!

11:28 AM Nov 09, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

கடந்த 2018 ம் ஆண்டு முதல்  தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி வகித்து வந்த சத்ய பிரதா சாஹூவுக்கு கூடுதல் பொறுப்பாக தமிழக கால்நடைத்துறை செயலர் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் தமிழக அரசின் சிறு, குறு தொழில்துறை செயலாளராக உள்ளார்.

Advertisement

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அர்ச்சனா பட்நாயக், 2002ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்.,பணியில் சேர்ந்தார். கோவை, நீலகிரி மாவட்ட கலெக்டராகவும் பணியாற்றி உள்ளார். கோவையின் முதல் பெண் கலெக்டர் என்ற பெருமை இவருக்கு உள்ளது, குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தமிழகத்தில் முதல் தமிழக தலைமை தேர்தல் பெண் அதிகாரி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

Advertisement
Tags :
Archana PatnaikSatya Pratha Sahutamilnadu Chief Electoral Officer
Advertisement