தமிழக தேர்தல் களத்தில் தவெக இல்லை - முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம்!
தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் மட்டும் தான் களத்தில் நிற்பதாகவும், தவெக களத்திலேயே இல்லை எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
Advertisement
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், 2026 தேர்தலில் திமுகவிற்கும், தவெகவிற்கும் தான் போட்டி என விஜய் கூறுவது சிறந்த நகைச்சுவை என்றும் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி ஆளுங்கட்சியாக இருந்த நேரத்தில் ரைடுக்கு பயந்து அந்த கட்சியோடு கூட்டணி வைத்த கட்சி திமுக என்றும் அவர் கூறினார்.
ஈழத்தமிழர் படுகொலைக்கு காரணமான காங்கிரஸோடு திமுக கூட்டு வைத்துள்ளது என்றும், இது ஒவ்வாத ஒப்பாத கூட்டணி என்றும், மக்கள் ஏற்றுக் கொள்ளாத கூட்டணி எனறும் அவர் குறிப்பிட்டார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வெற்றி கூட்டணி அதிமுக பாஜக கூட்டணி என்றும், சிறந்த கூட்டணி என வலலுனர்கள் கூறுவதாகவும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.