தமிழக நலன் சார்ந்து மத்திய அரசு இயங்குவது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது - மத்திய அமைச்சர் எல்.முருகன்
09:49 AM Dec 25, 2024 IST
|
Murugesan M
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழக நலன் சார்ந்தே இயங்குகிறது என்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Advertisement
மதுரை டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்த விவகாரம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன், மக்களின் கோரிக்கையை பரிசீலித்து டங்ஸ்டன் சுரங்க ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்கு, மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழகத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக திமுக கூட்டணி கட்சிகள் வீண் விஷம பிரசாரம் செய்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எப்போதும் தமிழக நலன் சார்ந்தே இயங்குகிறது என்பது மீண்டும் ஒரு முறை உறுதியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
Next Article