தமிழக பாஜக புதிய மாவட்ட தலைவர்கள் பதவியேற்பு - அண்ணாமலை வாழ்த்து!
06:56 AM Jan 28, 2025 IST
|
Sivasubramanian P
தமிழக பாஜக மாவட்ட தலைவர்களாக பதவி ஏற்றவர்களுக்கு மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், "பாரதப் பிரதமர் மோடி ஆசிகளுடன், பாஜக தேசியத் தலைவரும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா வழிகாட்டுதலுடன்,தமிழக புதிய மாவட்டத் தலைவர்களாகப் பொறுப்பேற்றிருக்கும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
தமிழகத்தையும், நாட்டையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல, பிரதமர் வழிகாட்டுதலின்படி, தங்கள் முழு பங்களிப்பையும் வழங்கி,தமிழக பாஜக
நிர்வாகிகள், சகோதர சகோதரிகள் அனைவருடனும் ஒருங்கிணைந்து உழைக்க வேண்டும் என்று, அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement