தமிழக பெண்கள் நினைத்தால் திராவிட மாடல் அரசு தூக்கி எறியப்படும் - தமிழிசை சவுந்தரராஜன்
தமிழக பெண்கள் நினைத்தால் திமுக திராவிட மாடல் அரசு தூக்கி எறியப்படும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : "தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதை கண்டித்தும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உள்ளே ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தும் உரிமையை கூட தமிழக அரசு தர மறுக்கிறது.
எங்கள் தொண்டர்கள் கூடுவதை கூட தடுத்து ஒவ்வொருவர் வரும்போதும் அவர்களை அராஜகமாக கைது செய்து நான் அமைதியாக ஆர்ப்பாட்டத்திற்கு வந்த உடனேயே சுமார் 25 போலீஸ் என்னை சூழ்ந்து கொண்டு நகர விடாமல் நெருக்கி விரும்பத்தகாதது போல் நடந்து கொண்டார்கள்.
காவல்துறையின் இந்த செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்... போராட்டம் செய்பவர்களின் குரலை ஒடுக்க சுமார் 500 காவல் துறையினர் இதில் ஒருவர் கூட பொதுவெளியில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க இருப்பதில்லை...
போராடுபவர்களை தடுக்கிறார்கள் குற்றவாளிகள் தமிழகத்தில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் இதுதான் சுதந்திரமான திராவிட நாடு.. பெண்களுக்கு பாதுகாப்பில்லை பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க உரிமை இல்லை..
போராடுபவர்கள் மீது அடக்குமுறை.. குற்றவாளிகளுக்கு அரவணைப்பு.. இதுதான் இன்றைய ஆட்சியாளர் நிலை.. தமிழக பெண்கள் நினைத்தால் திமுக திராவிட மாடல் அரசு தூக்கி எறியப்படும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.