தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 17 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
Advertisement
அதில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த 17 மீனவர்கள், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அவர்களது 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அண்ணாமலை, மீனவர்களின் கைதால் குடும்பத்தினர் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆகவே, மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கடிதத்தில் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு முன்பு இலங்கை கடற்படையால் கைதான மீனவர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.