செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை - முதல்வருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பதில் கடிதம்!

01:23 PM Dec 12, 2024 IST | Murugesan M

பாகிஸ்தான் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை விடுவிக்க தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக முதல்வருக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்களுடன் சேர்த்து 14 இந்திய மீனவர்கள் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், ஜனவரி மாதம் 3ஆம் தேதி பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடி இயந்திரப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

இந்நிலையில்,  பாகிஸ்தான் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கைகள் இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர்  6ஆம் தேதி  பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில், பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 14 மீனவர்களையும், அவர்களது 'ஸ்ரீ வ்ராஜ் பூமி'  மற்றும் 'மந்தீப்' பெயர் கொண்ட படகுகளையும் பாகிஸ்தான் அதிகாரிகள் 3-1-2024 அன்று சிறைபிடித்ததை அறிந்த இந்திய அரசு, கைது செய்யப்பட்ட மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க ஏதுவாக, பாகிஸ்தான் அரசின் கவனத்திற்கு இதனைக் கொண்டு சென்றுள்ளனர்.

மீனவர்களுக்கு தூதரக அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் அதிகாரிகளால் இதுவரை அது வழங்கப்படவில்லை என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகம், சிறைபிடிக்கப்பட்டுள்ள 14 மீனவர்களுக்கும் விரைவில் தூதரக அனுமதி கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து செய்து வருவதாகவும், மீனவர்கள் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படும் வரை அவர்களது பாதுகாப்பு மற்றும் உடல்நலனை உறுதி செய்யுமாறு பாகிஸ்தானிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய தூதரகம் தொடர்ந்து கண்காணித்து, மீனவர்களை முன்கூட்டியே விடுவிப்பதற்கும், தாயகம் திரும்புவதற்கும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
diplomatic effortExternal Affairs Minister JaishankarFEATUREDMAINMK Stalinpakistanrelease of fishermenTamil Nadu
Advertisement
Next Article