தமிழக மீனவர்கள் கைது விவகாரம் : திமுக அரசு கடிதம் எழுதுவதை தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் திமுக அரசு கடிதம் எழுதுவதை தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 25ஆம் தேதி வங்கக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினர், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும், சேதப்படுத்துவதும் அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர்,
மீனவர்கள் கைது விவகாரத்தில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதை தவிர, திமுக அரசு வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டி உள்ளார்.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் 39 எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசும் காலம் தாழ்த்தாது உடனடியாக இலங்கை அரசுடன் பேசி தமிழக மீனவர்களின் கைது நடவடிக்கைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.