தமிழக மீனவர்கள் 18 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! : ஜெய்சங்கருக்கு அண்ணாமலை கடிதம்
11:04 AM Dec 04, 2024 IST | Murugesan M
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 18 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், காரைக்கால், நாகை மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த 18 மீனவர்கள் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் பயணித்த படகையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
Advertisement
இதனால் மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ள மீனவர்களின் குடும்பத்தினர், கைதான அனைவரையும் மீட்டு தருமாறு பாஜகவிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளார்.
எனவே, கைதான தமிழக மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக்கொள்வதாக அண்ணாமலை தனது கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement