தமிழக மீனவர்கள் 6 பேர் நிபந்தனை ஜாமினில் விடுதலை!
தமிழக மீனவர்கள் 6 பேரை நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்துள்ள இலங்கை நீதிமன்றம், 2 பேருக்கு தலா 40 லட்சம் ரூபாய் அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும் விதித்துள்ளது.
Advertisement
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, டிசம்பர் 8 -ம் தேதி மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது.
இந்த வழக்கு, ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, 6 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்தார். மேலும், படகு ஓட்டுநர்கள் இருவருக்கு தலா 40 லட்ச ரூபாய் அபராதமும்,6 மாதம் சிறை தண்டனையும் விதித்தார்.
விடுதலை செய்யப்பட்ட 6 மீனவர்களும், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதராக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். சிறை தண்டனை விதிக்கப்பட்ட இருவர் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.