தமிழக ரயில்வே திட்டங்கள் - மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!
தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் ரயில்வே திட்டங்களின் நிலை குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
Advertisement
அதில், போக்குவரத்து நெரிசல், மாற்று வழித்தடங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை கருத்தில்கொண்டும் ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் 3 வருடத்தில் 22 ரயில்வே திட்டங்களை மேற்கொள்ள 33 ஆயிரத்து 467 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், மார்ச் மாதம் 2024-ஆம் ஆண்டு வரை 7 ஆயிரத்து 154 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய வழித்தடத்தில் 10 ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும், 3 திட்டங்களில் கேஜ் மாற்றம் செய்யப்பட்டதாகவும், 9 திட்டங்களில் பயண வசதியை மேம்படுத்தும் வகையில் ஒற்றைப் பாதை இரட்டைப் பாதையாக விரிவாக்கும் செய்யப்பட்டதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.,
தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பன்மடங்கு அதிகரித்துள்ள போதும், அவற்றை முறையாக செயல்படுத்தும் பொறுப்பு மாநில அரசின் கையில் உள்ளதெனவும், நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் தமிழகத்தில் பல ரயில்வே திட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.