தமிழர் என்ற இரும்பின் மீது திராவிடம் என்ற துரு பிடித்துள்ளது - சீமான் விமர்சனம்!
04:00 PM Jan 24, 2025 IST
|
Sivasubramanian P
தமிழர் என்ற இரும்பின் மீது திராவிடம் என்ற துரு பிடித்துள்ளதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
Advertisement
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். தமக்கு எந்த தேர்தல் வியூக வகுப்பாளர்களும் தேவையில்லை என்றும் கூறினார்.
ஒரு லட்சம் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய சீமான் ஒரு லட்சம் போராட்டம் என்றால், ஒரு லட்சம் பிரச்னைகள் இருப்பதாக அர்த்தம் என்றும் கூறினார்.
Advertisement
ஒரு லட்சம் போராட்டத்திற்கு அனுமதியளித்த காவல்துறை அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் அனுமதி மறுத்தது ஏன்? என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.
Advertisement
Next Article