தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் தொடங்கிய விழா - அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்ற விழாவில் சர்ச்சை!
திருப்பத்தூரில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்ட நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமலேயே தொடங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் புதிய கிளை தொடங்கும் விழா நடைபெற்றது. இதில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்படாமலேயே நிறைவடைந்தது.
சில வாரங்களுக்கு முன்பு துணை முதலமைச்சர் உதயநிதி கலந்து கொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது சில வார்த்தைகள் விடுபட்டும், தவறாகவும் பாடப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற முதலமைச்சரின் நிகழ்ச்சிகளில் தமிழ்தாய் வாழ்த்து பாடப்படவில்லை.
இந்நிலையில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்ட விழாவிலும் தற்போது தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் புறக்கக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.