தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கு முன்னுரிமை - பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா தகவல்!
தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிப்பதாக பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்தார்.
Advertisement
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆண்டு நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழின் தொன்மையான இலக்கியங்களான திருக்குறள், சிலப்பதிகாரத்தை பிரெய்லி எழுத்து முறையில் பிரதமர் மோடி வெளியிட்டதை நினைவுகூர்ந்தார்.
திருக்குறள் மற்றும் சிலப்பதிகாரம் தொடர்பாக ஆய்வு செய்யும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இதன் மூலம் பயன்பெறுவதாக கூறிய சம்பித் பத்ரா,
சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்றுமுதல் 12-ஆம் வகுப்பு வரை பிராந்திய மொழிகளைப் பயிற்றுவிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியதாக கூறிய அவர், கல்லூரி மாணவர்கள் தங்களது பிராந்திய மொழியில் தேர்வு எழுதி, ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க பல்கலைக்கழக மானியக் குழு அறிவிக்கை வெளியிட்டிருப்பதாக தெரிவித்தார்.
இதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 22 ஆயிரம் புத்தகங்கள் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்றும் பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறினார்.