செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தமிழ் சமூக தலைவர்களை சந்தித்தது மகிழ்ச்சியான தருணம் - பிரதமர் மோடி

06:50 PM Apr 05, 2025 IST | Murugesan M

இலங்கையில் உள்ள தமிழ் சமூகத் தலைவர்களைப் பிரதமர் மோடி நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

Advertisement

இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள தமிழ் சமூக தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசினார்.

இது தொடர்பாகத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய தமிழ் சமூக தலைவர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா உள்ளிட்டோரைச் சந்தித்தது மகிழ்ச்சியான தருணம் எனவும், இலங்கை பயணத்தின்போது துவங்கி வைக்கப்பட்ட பல திட்டங்களும் முன்னெடுப்புகளும் தமிழ் சமூகத்தினரின் பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றத்திற்குப் பங்காற்றும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுடன் சுமூகமான சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இச்சமூகத்தினர் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்குமான ஒரு வாழும் உறவுப் பாலமாக திகழ்கின்றனர்.

இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்புடன் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுக்காக 10000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித சீதை அம்மன் ஆலயம் ஆகியவற்றின் நிர்மாணம் மற்றும் ஏனைய சமூக அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்தியா ஆதரவு வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
India VS SrilankaIt was a happy moment to meet Tamil community leaders - Prime Minister ModiMAINPM Modi
Advertisement
Next Article