செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு!

05:49 PM Mar 17, 2025 IST | Murugesan M

ஈரோடு மாவட்டம் தேவர்மலை புட்டப்பனூர் கிராமத்தில் கடந்த 20 நாட்களாகத் தண்ணீர் கிடைக்காததால் பொதுமக்கள் அவதி அடைந்த நிலையில், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக மின் இணைப்பு வழங்கப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டது.

Advertisement

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் பர்கூர் ஊராட்சி தேவர் மலை புட்டப்பனூர் தெருவில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வராத காரணத்தால், ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆழ்குழாய்  கிணற்றில் பொதுமக்கள் தண்ணீர் எடுத்து வந்தனர்.

மேலும், இப்பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றில் பைப் லைன் போடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மின் இணைப்பும் நிலுவையில் இருந்ததால், சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்குக் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement

இதுகுறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் அண்மையில் செய்தி வெளியான நிலையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மின்மோட்டார் அமைத்து பொதுமக்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்தது.

Advertisement
Tags :
FEATUREDMAINTamil Janam News echoes the solution to the water problem!ஈரோடு மாவட்டம்தமிழ் ஜனம் செய்தி எதிரொலி
Advertisement
Next Article