தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக மாநகராட்சி நடவடிக்கை : 30 ஆண்டுகளுக்கு பின் சீரமைக்கப்படும் பந்தல்குடி கால்வாய் பாலம்!
07:59 PM Mar 20, 2025 IST
|
Murugesan M
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக மதுரையில் உள்ள பந்தல் குடி கால்வாய் பாலம் 30 ஆண்டுகளுக்குப் பின் சீரமைக்கப்பட்டு வருகிறது.
Advertisement
மதுரை மாநகராட்சி 28ஆவது வார்டு பகுதியில் பந்தல் குடி கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாயைக் கடப்பதற்காக 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேம்பாலம், பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடந்தது.
இதுகுறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் கடந்த மார்ச் 10ஆம் தேதி செய்தி வெளியானது. இந்த நிலையில், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாகப் பாலத்தைச் சீர்செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement