தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் சாலையைச் சீரமைக்கும் நெடுஞ்சாலைத்துறை!
08:09 PM Apr 02, 2025 IST
|
Murugesan M
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் சாலையைச் சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள சாலைகள் கடந்த 10 ஆண்டுகளாகப் பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து காணப்பட்டது.
இதனால் பேருந்துகளை இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் சிரமப்பட்ட நிலையில், இது குறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது.
Advertisement
இதன் எதிரொலியாக, மதுரை ஒருங்கிணைந்த எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் சிதலமடைந்துள்ள சாலைகளைச் சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement