தமிழ் ஜனம் தொலைக்காட்சி தனித்துவமாகச் செயல்படுகிறது : எல்.முருகன் பாராட்டு!
பிற காட்சி ஊடகங்களில் இருந்து தமிழ் ஜனம் தொலைக்காட்சி தனித்துவமாகச் செயல்படுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Advertisement
சென்னை ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில் நடைபெற்ற தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பேசியவர்
தேசியம், தெய்வீகம், தமிழ் என்பதை முதன்மையாகக் கொண்டு, 'தமிழ் ஜனம்' தொலைக்காட்சி திறம்பட செயல்பட்டு வருகிறது.
மேலும், நமது மத்திய அரசு செயல்படுத்துகின்ற வளர்ச்சிக்கான நலத்திட்டங்களையும் மக்களிடத்தில் கொண்டு சேர்த்து வருகிறது.
போலிச் செய்திகளை பொதுவெளியில் பரப்புகின்ற பல்வேறு சமூகவலைதளப் பக்கங்களும், தேவையற்ற விஷயங்களை சமூகத்தில் விதைத்து வருகின்ற OTT தளங்களும், நமது ஆட்சியில் தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இப்படியான சூழலுக்கு மத்தியில், உண்மைச் செய்திகளையும், நிகழ்வுகளையும் சமரசமின்றி 'தமிழ் ஜனம்' தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது என எல்.முருகன் தெரிவித்தார்.