செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட "உபநிஷத் கங்கா" தொடர் வெளியீடு!

02:43 PM Jan 29, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

சின்மயா மிஷன் சனாதன சேவா சங்கம் மூலம் "உபநிஷத் கங்கா" தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

2012-ம் ஆண்டு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களின் பேராதரவை பெற்ற "உபநிஷத் கங்கா" தொடர் 13 ஆண்டுகள் கடந்தும் அதன் தன்மை மாறாமல் உள்ளது. மனிதர்களிடம் ஆன்மிக சிந்தனையையும், ஆர்வத்தையும், நேர்வழியையும் தூண்டும் இந்த தொடரை, பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட சின்மயா மிஷன் சனாதன சேவா சங்கம் முடிவெடுத்தது.

அதனடிப்படையில் 2 ஆண்டுகளாக அதற்கான பணிகளை மேற்கொண்ட அவர்கள், "உபநிஷத் கங்கா" தொடரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில், சென்னை சேத்துப்பட்டில் உள்ள சின்மயா ஹெரிடேஜ் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 5 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட "உபநிஷத் கங்கா" தொடரை சுவாமி ஸ்வரூபானந்தா வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி, உபநிஷத் கங்கா தொடரின் இயக்குனர் முனைவர். சந்திரபிரகாஷ் திவேதி, மத்திய சின்மயா மிஷன் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி மனிஷா கேம்லானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, மூன்று தலைமுறைகளுக்கு தெரியாத விஷயங்கள் அடங்கிய இந்த தொடரை நாம் அனைவரும் பார்க்க வேண்டியது மிகவும் அவசியம் என தெரிவித்தார்.

 

Advertisement
Tags :
"Upanishad Ganga" series"Upanishad Ganga"translationChinmaya Mission Sanatana Seva Sangam.former Chief Election Commissioner of India GopalaswamyMAINSwami Swaroopananda released the "Upanishad Ganga" seriesThuglak author Gurumurthy
Advertisement