செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தமிழ் புத்தாண்டையொட்டி பாரம்பரிய நடனங்களுடன் வெண்குடை திருவிழா!

04:41 PM Apr 14, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி பாரம்பரிய நடனங்களுடன் வெண்குடை திருவிழா கொண்டாடப்பட்டது.

Advertisement

சீனிவாசன் புதுத் தெருவிலிருந்து அலங்கரிக்கப்பட்ட அய்யனார் சுவாமி, பூச்சப்பரத்தில் உலா வந்தார். அப்போது, காலில் சலங்கை அணிந்த நபர் ஒரு வெண் குடையுடன் நடனமாட அதனை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.

இதைத் தொடர்ந்து பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம், மயிலாட்டம் ஆகியவற்றுடன் வீதியுலா நடைபெற்றது. இதேபோல, பழைய பாளையத்தைச் சேர்ந்த சித்திரைத் திருவிழா குழுவினர் சார்பிலும் மாயூரநாத சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Advertisement

விழாவைக் காணத் திரளான பக்தர்கள் குவிந்ததால் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement
Tags :
MAINVenkudai Festival with traditional dances on the occasion of Tamil New Yearவெண்குடை திருவிழா
Advertisement