செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தமிழ் மொழியின் இலக்கிய வளத்தை மீட்டெடுத்த தமிழறிஞர் உ.வே.சா : எல். முருகன் புகழாரம்!

01:37 PM Feb 19, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ஓலைச்சுவடிகளையும் சேகரித்து, பகுத்து பாடவேறுபாடு செய்து அச்சில் ஏற்றியவர்  தமிழறிஞர்  உ.வே.சாமிநாத ஐயர் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்

Advertisement

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தமிழ் மொழியின் இலக்கிய வளத்தை மீட்டெடுத்த மாபெரும் தமிழறிஞர் மற்றும் பதிப்பாளர். பெருங்காப்பியங்கள் குறித்து அறிந்த நாள் முதல் தேடித்தேடி சேகரிக்க ஆரம்பித்து, இன்று நாம் பாடப் புத்தகங்களில் படித்துக் கொண்டிருக்கும் அத்தனை இலக்கிய, இலக்கணக் குறிப்புகளையும் இடையறாது சேகரித்து, பிழையின்றி தொகுத்து, அதற்கெல்லாம் உரையும் எழுதினார்.

Advertisement

ஓலைச்சுவடிகளையும் சேகரித்து, பகுத்து பாடவேறுபாடு செய்து அச்சில் ஏற்றினார். தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய அரும்பணியால், நம் தமிழ்ச் சமூகத்தில் இவரை, ‘தமிழ்த் தாத்தா’ என்று அன்போடு அழைக்கிறோம். ‘தமிழறிஞர் உ.வே.சாமிநாதையர்’ அவர்களின் பிறந்தநாளான இன்று, அவருடைய அரும்பணிகளை நினைவுகூர்ந்து போற்றுவோம்! என தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
bjp l murugancentral minister l muruganFEATUREDMAINThe great Tamil scholar who restored the literary wealth of the Tamil language U. Vesa : L. Praise of Murugan!உ.வே.சாமிநாத ஐயர்
Advertisement