தரமற்ற முறையில் சாலை - ஒப்பந்தத்தை ரத்து செய்த ஆட்சியர்!
11:11 AM Mar 20, 2025 IST
|
Murugesan M
ஊத்துக்கோட்டை அருகே முறையாகச் சாலை அமைக்காததால் ஒப்பந்தத்தை ரத்து செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப், பாலவாக்கம், சிறுவானூர் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அத்தங்கி காவனூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை தரமற்ற முறையில் இருந்ததைக் கண்ட அவர், சாலை ஒப்பந்தத்தை ரத்து செய்தார். மேலும், தரமான முறையில் சாலையை அமைக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Advertisement
Advertisement