தருமபுரி மாவட்டத்தில் ராம்ராஜ் நிறுவனம் தனது இரண்டாவது கிளையை தொடங்கியுள்ளது.
வேட்டி, சட்டை விற்பனையில் தனி முத்திரை பதித்த ராம்ராஜ் நிறுவனம், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தங்கள் கிளைகளை தொடங்கியுள்ளது. இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் ராம்ராஜ் நிறுவனம் சார்பில் 2வது கிளை தொடங்கப்பட்டது.
இதன் திறப்பு விழாவில் ராம்ராஜ் நிறுவனத்தின் தலைவர் கே.ஆர்.நாகராஜ் கலந்து கொண்டு வரவேற்புரை ஆற்றினார். இதை தொடர்ந்து புதிய கிளையை டிஎன்சி கல்வி குழுமத்தின் தலைவர் டி.என்.சி. மணிவண்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.