தர்மத்தையும், கலாச்சாரத்தையும் நிலைநாட்டுவது நமது கடமை - ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு
10:44 AM Nov 23, 2024 IST | Murugesan M
தர்மத்தையும், கலாச்சாரத்தையும் நிலைநாட்டுவது நமது அனைவரின் கடமை என, ZOHO அமைப்பின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் ABVP அமைப்பின் 70வது தேசிய மாநாடு நடைபெற்றது. அதனை தொடங்கி வைத்து உரையாற்றிய ஸ்ரீதர் வேம்பு, பாரதத்தை விஸ்வ குருவாக்க வேண்டும் என்றால், அது வித்தியார்த்தி பரிஷத் மாணவர்களால் மட்டும்தான் முடியும் என தெரிவித்தார்.
Advertisement
சுய நம்பிக்கை, சுய உந்துதல், சுய ஒழுக்கம் ஆகியவை ABVP மாணவர்களுக்கு இயற்கையாகவே உள்ளதாகவும் புகழாரம் சூட்டினார்.
நமது நாட்டில் இளைஞர்களுக்கு அதிகமான வேலைவாய்ப்பு தேவைப்படுவதாக குறிப்பிட்ட அவர், அரசால் அனைவரும் வேலைவாய்ப்பை உருவாக்க முடியாது எனவும், வேலைவாய்ப்ப்பிற்கான சூழலைதான் உருவாக்க முடியும் என்றும் கூறினார்.
Advertisement
Advertisement