தர்ஷன் என் மனைவியை அடித்தார் தவறாக நடக்க முயன்றார் : நீதிபதியின் மகன் பரபரப்பு பேட்டி!
04:01 PM Apr 06, 2025 IST
|
Murugesan M
பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் தன் மனைவியைத் தாக்கி தவறாக நடந்து கொள்ள முயன்றதாக நீதிபதியின் மகன் ஆத்திச்சூடி குற்றஞ்சாட்டி உள்ளார்.
Advertisement
சென்னை முகப்பேரில் வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக பிக் பாஸ் பிரபலம் தர்ஷனுக்கும், ஆத்திச்சூடி என்பவருக்கும் இடையே தகராறு ஏறுபட்டது. வாக்குவாதம் கைகலப்பாக மாறியதை அடுத்து ஆத்திச்சூடி மீது தர்ஷன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியானதை அடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், தர்ஷனை கைது செய்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நீதிபதியின் மகன் ஆத்திச்சூடி, தர்ஷன் தன் மனைவி மற்றும் மாமியாரைத் தாக்கி தவறாக நடந்து கொள்ள முயன்றதாகக் குற்றஞ் சாட்டினார்.
Advertisement
Advertisement