திருப்பத்தூரில் சாலை விபத்தில் உயிரிழந்த தலைமை காவலரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
புதூர் நாடு மலைக்கிராமத்தை சேர்ந்த காளிதாஸ், ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இவர் அண்மையில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான புதூர் நாடு மலை கிராமத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.