For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

தவிர்க்க முடியாத இனிப்பு, மயக்கும் ருசியுடன் மக்கன் பேடா - சிறப்பு கட்டுரை!

11:59 AM Oct 31, 2024 IST | Murugesan M
தவிர்க்க முடியாத இனிப்பு  மயக்கும் ருசியுடன் மக்கன் பேடா   சிறப்பு கட்டுரை

நூற்றாண்டுகளை கடந்தும் ஆற்காட்டின் தவிர்க்க முடியாத இனிப்பு வகையாக திகழ்கிறது ஸ்பெசல் மக்கன் பேடா. ஆற்காடு நவாப் காலத்திலிருந்து இன்று வரை மக்கள் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கும் மக்கன் பேடா தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

முகலாயர்கள், நவாப்புகள், ஆங்கிலேயர்கள் என பல்வேறு ஆட்சியாளர்களை கண்ட ஆற்காட்டிற்கு தற்போதைய அடையாளமாக திகழ்கிறது ஸ்பெஷல் மக்கன் பேடா எனும் தனித்துவமான இனிப்பு. நவாப்புகள் மற்றும் இஸ்லாமிய மன்னர்களின் தலைநகரங்களின் ஒன்றாக விளங்கிய ஆற்காட்டில் நவாப் மன்னன் ஒருவரின் புதிய வகை இனிப்புகளை கண்டறிய வேண்டும் என்ற கட்டளைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டது தான் இந்த மக்கன் பேடா என்ற கூற்றும் பரவலாக உள்ளது.

Advertisement

சுத்தமான பசும்பாலில் இருந்து பிரிக்கப்பட்ட நெய், கோவா மற்றும் மைதா மாவை கொண்டு தயாரிக்கப்படும் மக்கன் பேடா நவாப், காலத்திலிருந்து இன்று வரை ஆற்காட்டின் தவிர்க்க முடியாத அடையாளமாக திகழ்கிறது. மன்னருக்காக மக்கன் பேடாவை தயாரித்த முன்னோர்களின் வம்சாவளியினர் இன்றும் அதே வழிமுறைகளை பின்பற்றி தயாரித்து விற்பனை செய்துவருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தயாரித்து விற்பனை செய்யப்பட்டாலும், ஆற்காட்டில் தயாரிக்கப்படும் மக்கன் பேடாவுக்கு மட்டுமே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. வெளியூர் மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலிருந்தும் அதிகமான மக்கள் மக்கன் பேடாவை வாங்குவதற்காகவே வேலூர் மாவட்டத்திற்கு வருவது உண்டு. வழக்கமான காலங்களிலேயே நன்றாக விற்பனையாகும் மக்கன் பேடா தீபாவளி பண்டிகை காலம் என்பதால் வழக்கத்தை விட அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

தீபாவளி பண்டிகையின் போது புத்தாடைகளுக்கும், பட்டாசுகளுக்கும் அடுத்த இடத்தில் இருக்கும் இனிப்பு வகைகளில் பிரதான இடத்தை பிடித்திருக்கிறது இந்த மக்கன் பேடா.

Advertisement
Tags :
Advertisement